/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தாயை பிரிந்த குட்டியை தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி: வேறு கூட்டத்துடன் சேர்க்க திட்டம்தாயை பிரிந்த குட்டியை தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி: வேறு கூட்டத்துடன் சேர்க்க திட்டம்
தாயை பிரிந்த குட்டியை தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி: வேறு கூட்டத்துடன் சேர்க்க திட்டம்
தாயை பிரிந்த குட்டியை தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி: வேறு கூட்டத்துடன் சேர்க்க திட்டம்
தாயை பிரிந்த குட்டியை தாயிடம் சேர்க்கும் முயற்சி தோல்வி: வேறு கூட்டத்துடன் சேர்க்க திட்டம்
ADDED : ஜூன் 07, 2024 04:22 PM

தொண்டாமுத்தூர்: கோவையில், தாயை பிரிந்த குட்டியை மீண்டும் தாயுடன் சேர்க்க வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால், குட்டியை வேறு கூட்டத்துடன் சேர்க்க வானத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30ம் தேதி உடல் நலக்குறைவால், 40 வயது பெண் யானை தனது குட்டியுடன் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் குட்டி யானை, தாயை விட்டு பிரிந்து வேறு யானையுடன் சென்றது. ஐந்தாம் நாள் சிகிச்சையின் போது பெண் யானை உடல்நலம் முற்றிலும் குணமடைந்ததால், அதனை வனத்துறையினர் வனப்பகுதியில் விடுவித்தனர்.
இந்நிலையில், தாயை விட்டு பிரிந்த குட்டி யானை, கடந்த 4ம் தேதி, போலுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பச்சான் வயல் பகுதியில் இருப்பது தெரியவந்தது. வனத்துறையினர் குட்டி யானையை பிடித்து வந்து, யானைமடுவு மற்றும் அட்டுக்கல் வனப்பகுதியை சுற்றித்திரிந்த அதன் தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மூன்றாம் நாளாக இன்று (ஜூன் 7) ஆனைமலை புலிகள் காப்பக சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு, குட்டியை தாயிடம் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், குட்டி அருகில் வந்தபோது, தாய் யானை அடர் வனப்பகுதிக்குள் சென்றது.
இதனால், மூன்று நாட்களாக வனத்துறையினர், குட்டி யானையை தாயிடம் சேர்க்க மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து, குட்டி யானையை, யானைமடுவு பகுதியில், இரண்டு குட்டிகளுடன் சுற்றித்திறியும் வேறு தாயின் கூட்டத்தில் சேர்க்க திட்டமிட்டனர். இதற்காக, அட்டுக்கல் வனப்பகுதியில் இருந்த குட்டியை வனத்துறை வாகனத்தில் ஏற்றி, யானைமடுவு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இன்று மாலை முதல் இரவு வரை குட்டியை புதிய கூட்டத்தில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.