/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ' ஏசி' பஸ்சில் மூட்டைப்பூச்சி கடி பயணிக்கு இழப்பீடு தர உத்தரவு ' ஏசி' பஸ்சில் மூட்டைப்பூச்சி கடி பயணிக்கு இழப்பீடு தர உத்தரவு
' ஏசி' பஸ்சில் மூட்டைப்பூச்சி கடி பயணிக்கு இழப்பீடு தர உத்தரவு
' ஏசி' பஸ்சில் மூட்டைப்பூச்சி கடி பயணிக்கு இழப்பீடு தர உத்தரவு
' ஏசி' பஸ்சில் மூட்டைப்பூச்சி கடி பயணிக்கு இழப்பீடு தர உத்தரவு
ADDED : ஜூன் 07, 2024 07:23 PM
கோவை:கோவை, பி.என்.புதுாரைச் சேர்ந்த முகுந்தன் என்பவர், பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றுகிறார். கோவைக்கு செல்ல, 'ரெட்பஸ்' என்ற ஆப் வாயிலாக, 2023, ஆக., 3ல், இரு டிக்கெட்களுக்கு, 2,090 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்தார்.
கலைமகள் டிராவல்ஸ் 'ஏசி' பஸ்சில் இருக்கை ஒதுக்கப்பட்டது. பஸ் ஏறியது முதல், கோவைக்கு வரும் வரை, இருக்கையில் மூட்டை பூச்சிகள் அவரை கடித்துக் கொண்டே இருந்தன. இதனால், இரவு முழுதும் துாங்க முடியாமல் அவதிப்பட்டதால், பஸ் டிரைவரிடம் புகார் செய்தார். அவர் கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து, ரெட்பஸ் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால், ரெட்பஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதார் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு டிக்கெட் தொகை, 2,090 ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.