/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முருகவேள் பன்னிரு திருமுறை பாராயணம் செய்து சாதனை முயற்சி முருகவேள் பன்னிரு திருமுறை பாராயணம் செய்து சாதனை முயற்சி
முருகவேள் பன்னிரு திருமுறை பாராயணம் செய்து சாதனை முயற்சி
முருகவேள் பன்னிரு திருமுறை பாராயணம் செய்து சாதனை முயற்சி
முருகவேள் பன்னிரு திருமுறை பாராயணம் செய்து சாதனை முயற்சி
ADDED : ஜூன் 30, 2025 12:09 AM

தொண்டாமுத்தூர்; பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் ஆதின திருமடத்தில், உலக சாதனைக்காக, கல்லூரி மாணவி, முருகவேள் பன்னிரு திருமுறை பாராயணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், தமிழ் இலக்கியவியல் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி தேவதர்ஷினி, உலக சாதனைக்காக, தொடர் 'முருகவேள் பன்னிரு திருமுறை' பாராயணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
இம்முயற்சியின் துவக்க நிகழ்வில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மாணவி தேவதர்ஷினிக்கு, ஆசி வழங்கினார். தொடர்ந்து, உலக சாதனை முயற்சியை கல்லூரியின் செயற்குழு உறுப்பினர் பானுமதி துவக்கி வைத்தார்.
நேற்று காலை, 10:00 மணி முதல் முருகவேள் பன்னிரு திருமுறை பாராயணத்தை மாணவி தேவதர்ஷினி துவக்கினார். நாள்தோறும், 11 மணி நேரம் வீதம், முருகவேள் பன்னிரு திருமுறையில் உள்ள 5,414 பாடல்களை மாணவி பாட உள்ளார். தொடர்ந்து, 8 நாட்கள் பாராயணம் செய்து, உலக சாதனைக்கு முயற்சிப்பதாக, மாணவி தெரிவித்தார்.