ADDED : செப் 21, 2025 11:12 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அரசு பொது மருத்துவமனைக்கு பல்வேறு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.
பெரியநாயக்கன்பாளையத்தில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள பிரசவ வார்டு, பச்சிளம் குழந்தைகள் வார்டு உள்ளிட்டவைகளுக்கு பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமநாதன், சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பு பிரிட்ஜ், பெட் விரிப்புகள், பெட்ஷீட், தலையணை உறைகள், பச்சிளம் குழந்தைகள் வார்டில் குழந்தைகள் எவ்வித நோய் தொற்றும் இல்லாமல் சிகிச்சை பெற தடுப்புகள், திரைச்சீலைகள் ஆகியவற்றை அமைத்து கொடுத்தார்.
இவற்றை அரசு பொது மருத்துவமனைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர் தீபா, காது, மூக்கு, தொண்டை டாக்டர் லேகா, தோல் மருத்துவர் டாக்டர் ராஜேஷ் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.