/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஏப்ரல் மின்சார கட்டணமே இம்மாதமும் செலுத்தலாம் ஏப்ரல் மின்சார கட்டணமே இம்மாதமும் செலுத்தலாம்
ஏப்ரல் மின்சார கட்டணமே இம்மாதமும் செலுத்தலாம்
ஏப்ரல் மின்சார கட்டணமே இம்மாதமும் செலுத்தலாம்
ஏப்ரல் மின்சார கட்டணமே இம்மாதமும் செலுத்தலாம்
ADDED : ஜூன் 17, 2025 11:01 PM
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கு.வடமதுரை, உருமாண்டம்பாளையம் அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில், நிர்வாக காரணங்களால், ஜூன் மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், உருமாண்டம்பாளையம், மருதம் கேலக்ஸி, ராகவேந்தரா காலனி, ஜீவா நகர், சாஸ்திரி நகர், நஞ்சேகவுண்டன்புதுார், காந்தி நகர், ஜோஸ் கார்டன் மற்றும் ஆதவ் சிட்டி பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், ஏப்ரல் மாத மின் கட்டணத்தையே ஜூன் மாதத்துக்கும் செலுத்தலாம், என, கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.