Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேர்த்திருவிழாவில் அன்னதானம் :வி.எச்.பி., அமைப்பு தீர்மானம்

தேர்த்திருவிழாவில் அன்னதானம் :வி.எச்.பி., அமைப்பு தீர்மானம்

தேர்த்திருவிழாவில் அன்னதானம் :வி.எச்.பி., அமைப்பு தீர்மானம்

தேர்த்திருவிழாவில் அன்னதானம் :வி.எச்.பி., அமைப்பு தீர்மானம்

ADDED : பிப் 23, 2024 11:27 PM


Google News
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை கூட்டம் நடந்தது.

பொள்ளாச்சியில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாரியம்மன் கோவிலில் நடந்தது. கோவை தெற்கு மாவட்ட அமைப்பாளர் முருகன் தலைமை வகித்தார்.

மாநில இணை பொதுச்செயலாளர் வக்கீல் விஜயகுமார் பேசினார். கிராம பூஜாரி பேரவை மாவட்ட இணை அமைப்பாளர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். வி.எச்.பி., பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். வெள்ளி தேரோட்டத்தின் போது, பூ மார்க்கெட் அருகே அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஹிந்துக்களாக இருந்து, மாற்று மதத்துக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிசீலிக்கப்படும் என்ற, தமிழக முதல்வரின் அறிவிப்பை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழர் பண்பாடு, கலாசாரம், மொழி அழிந்து விடும்.

தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் வரும் மார்ச், 2ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநில பொதுக்குழுவில் பொறுப்பாளர்கள், கிராம கோவில் பூஜாரிகள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

கோவில் பூஜாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் எடுத்துக்கொண்டதை, தமிழக அரசு திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவையுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us