உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்ற நேரம் வந்துவிட்டது: பிரதமர் பதிலுரை
உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்ற நேரம் வந்துவிட்டது: பிரதமர் பதிலுரை
உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்ற நேரம் வந்துவிட்டது: பிரதமர் பதிலுரை

பதிலுரை
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி அளித்த பதிலுரை: வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு குறித்து ஜனாதிபதி விரிவாக பேசியிருந்தார். இதயத்தில் இருந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் பொய் பரப்பினாலும் அதனை நிராகரித்து எங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தேர்வு செய்துள்ளனர். நாட்டு மக்கள் தேஜ கூட்டணிக்கு தான் ஓட்டு போட்டனர். மக்கள் எங்களின் 10 ஆண்டு கால ஆட்சியை பார்த்து ஓட்டு போட்டனர். ஏழைகளின் நலனுக்காக எந்தளவுவுக்கு அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையே மகேசன் சேவை என நாங்கள் செயல்பட்டதை அங்கீகரித்து உள்ளனர். தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சியினர் பிதற்றி வருவது கண்கூடாக தெரிகிறது.
சகித்து கொள்ள முடியாது
இந்திய தேர்தல் முறையை கண்டு உலகமே வியந்து வருகிறது.10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். ஊழலை முற்றிலுமாக ஒழிக்க உறுதி பூண்டுள்ள எமது அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும். எக்காரணத்தை கொண்டும் ஊழலை சகித்து கொள்ள முடியாது.
முடிவு
அனைவருக்குமான நீதி என்ற கொள்கையை அரசு பின்பற்றி வருகிறது. சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் தான் இந்த நாட்டை அழித்து கொண்டு இருந்தது. இந்த அரசியலுக்கு இம்முறை மக்கள் முற்றுப்புள்ளி வைத்து உள்ளனர். ஊழலுக்கும், திருப்திபடுத்தும் அரசியலுக்கும் மக்கள் முடிவு கட்டினர். எதிர்வரும் தலைமுறைக்கு வலிமையான பாரதத்தை உருவாக்குவதன் மீதே எங்களின் கவனம் உள்ளது. உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றும் நேரம் வந்துவிட்டது.
திட்டங்கள்
வளர்ச்சியடைந்த தேசமாக இந்தியா மாறுவதை பார்க்க மக்கள் காத்திருந்தனர். 2047 ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற 24 மணி நேரமும் பணியாற்ற நாங்கள் தயார். அதுனை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.