Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பக்தர்கள் பலி

உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பக்தர்கள் பலி

உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பக்தர்கள் பலி

உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பக்தர்கள் பலி

UPDATED : ஜூலை 03, 2024 12:00 PMADDED : ஜூலை 02, 2024 05:16 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 122 பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தரா ராவ் நகரில், போலே பாபா சத்சங்கம் என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்து மொத்தமாக மக்கள் வெளியேறினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யோகி ஆதித்யநாத் இரங்கல்


கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய, தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்


பார்லிமென்ட்டில் நடைபெற்று வரும் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி வரும் மோடி உ.பி.,யில் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியனாவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

மேலும் இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா. ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயம்அடைந்தவர்களுக்கு தலா ரூ.50, ஆயிரம் வழங்கப்படும் என்றார். முன்னதாக உபி. முதல்வர் யோதி ஆதித்யநாத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சம்பவ இடத்தி் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஜனாதிபதி இரங்கல்


உ.பி.,யில் ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கிய பலியானவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்


ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக காங்.., தலைவர் ராகுல் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us