/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நிரம்பி ததும்பும் அமராவதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சிநிரம்பி ததும்பும் அமராவதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் அமராவதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் அமராவதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் அமராவதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 03, 2024 11:59 PM

உடுமலை : உடுமலை அமராவதி அணை, இரு வாரமாக ததும்பிய நிலையில் காணப்படுகிறது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியதால், அணைக்கு நீர் வரத்தின்றி, நீர் மட்டம் குறைவாக காணப்பட்டது.
இதனால், பாசன நிலங்களுக்கு முழுமையாக நீர் வழங்க முடியாமல், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களில் உள்ள நிலைப்பயிர்களை காப்பாற்றும் வகையிலும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், உயிர்த்தண்ணீர் மட்டும் அவ்வப்போது திறக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்தாண்டு, டிச., இறுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால், அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து, கடந்த, டிச.,20ம் தேதி, இரவு நிரம்பியது. அணையிலிருந்து ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உபரி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, இரு வாரமாக அணை ததும்பிய நிலையில் காணப்படுகிறது.
கடந்தாண்டு, அணை நீர்மட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில், நடப்பாண்டு துவக்கத்திலேயே, அணையில் முழு கொள்ளளவுக்கு நீர் இருப்பு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அணை நிலவரம்
நேற்று காலை நிலவரப்படி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 89.60 அடியாகவும், மொத்த கொள்ளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 4,010 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 278 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, 257 கனஅடி நீர் வெளியேறியது.