/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மரக்கன்றுகள் பெற வேளாண்துறை அழைப்புமரக்கன்றுகள் பெற வேளாண்துறை அழைப்பு
மரக்கன்றுகள் பெற வேளாண்துறை அழைப்பு
மரக்கன்றுகள் பெற வேளாண்துறை அழைப்பு
மரக்கன்றுகள் பெற வேளாண்துறை அழைப்பு
ADDED : ஜன 02, 2024 11:26 PM
அன்னுார்:இலவசமாக மரக்கன்றுகள் பெற வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
வேளாண் துறை சார்பில், இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அன்னுார் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு, தேக்கு மற்றும் மகாகனி மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயிக்கு, ஒரு ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வீதம், அதிகபட்சம் 500 மரக்கன்றுகள் வழங்கப்படும். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிட்டா, ஒரு போட்டோ ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 97886 43941 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.