/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரைகுடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
ADDED : ஜன 08, 2024 12:16 AM
பொள்ளாச்சி:''பொள்ளாச்சி நகராட்சி நீருந்து நிலையத்தில் அபிவிருத்தி பணிகள் நடைபெறுவதால் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என, பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் சுப்பையா தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் சுப்பையா வெளியிட்ட அறிக்கை:
பொள்ளாச்சி நகராட்சி மார்க்கெட் ரோடு நீருந்து நிலையத்தில், அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதில் காலதாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாகவும், காய்ச்சியும் குடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.