/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளி முதலாமாண்டு விழாஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளி முதலாமாண்டு விழா
ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளி முதலாமாண்டு விழா
ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளி முதலாமாண்டு விழா
ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளி முதலாமாண்டு விழா
ADDED : பிப் 24, 2024 01:13 AM

வடவள்ளி;காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளியின், முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம், வெகு சிறப்பாக நடந்தது.
ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஆனந்தன், சேர்மன் அசோக் ஆனந்தன், ஸ்ரீவித்ய நாராயணா அறக்கட்டளையின் அறங்காவலர்கள் அனுதாபூனமல்லி, ஆர்த்தி ஆனந்தன் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். பள்ளி முதல்வர் சிவகுமார், ஆண்டறிக்கை வாசித்தார்.
ஆண்டு விழாவில், மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும், குழு பாடல்களும், திறமையை வெளிப்படுத்தும் மவுன நாடகமும், யோகாவும் அனைவரையும் கவர்ந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இப்பள்ளியில், மருத்துவம், பொறியியல், வர்த்தகம் மற்றும் பட்டய கணக்காளர் ஆகிய நுழைவு தேர்வுகளுக்கு, ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.