Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பதினைந்தே நாளில் பட்டா மாறுதல் அதிரடி உத்தரவு! பிற சான்றுகளும் விரைவில் கிடைக்கும்

பதினைந்தே நாளில் பட்டா மாறுதல் அதிரடி உத்தரவு! பிற சான்றுகளும் விரைவில் கிடைக்கும்

பதினைந்தே நாளில் பட்டா மாறுதல் அதிரடி உத்தரவு! பிற சான்றுகளும் விரைவில் கிடைக்கும்

பதினைந்தே நாளில் பட்டா மாறுதல் அதிரடி உத்தரவு! பிற சான்றுகளும் விரைவில் கிடைக்கும்

ADDED : ஜூலை 05, 2024 12:15 AM


Google News
கோவை;வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் பட்டா, ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக, 15 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவையில் அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாகக் கிடைப்பதில்லை. மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை; எத்தனை முறை மனு கொடுத்தாலும் சரியான பதில் இல்லை.

சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசு, மக்களுக்கு அளிக்கும் சேவைகளுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்கவில்லையென்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கவும், குறித்த காலத்துக்குள் சேவையளிக்கத் தவறிய அலுவலர்கள் தண்டிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் அரசின் அனைத்துச் சேவைகளும் விண்ணப்பித்த நாளிலிருந்து குறிப்பிட்ட நாளுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.

ரேஷன் கார்டு, 30 நாட்கள், வாரிசுச் சான்றிதழ் 15 நாட்கள், நிலப்பட்டா மாறுதல், பெயர் மாற்றம், 15 நாள், உட்பிரிவு செய்தல், 30 நாள். இறப்புச் சான்றிதழ் -7 நாள்.

வருவாய் சான்றிதழ்- 15 நாள், ஜாதிச்சான்று 7 நாள், மின் இணைப்பு, 14 நாள், குடிநீர் இணைப்பு, 7 நாள். இதனால் அரசு சேவை எப்போது கிடைக்கும் என்று மாதக்கணக்கில் காத்திருப்பது தடுக்கப்படும்.

தற்போது, தமிழகத்தில் வருவாய்த்துறை சார்பில் வழங்கும் ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக,15 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை பணியாளர்களுக்கு வருவாய் நிர்வாகத்துறை கமிஷனர் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழக அரசின் இந் நடவடிக்கையை மக்கள் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறுகையில், ''தமிழகஅரசின் நிலவருவாய்த்துறை கமிஷனரின் உத்தரவுப்படி வருவாய்த்துறை பணிகள் வேகமாக நிறைவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

''அதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் வேகமாகவும் விரைவாகவும் பணி மேற்கொண்டு வருகின்றனர்'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us