Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மானிய விலையில் ஊட்டச்சத்து செடிகள்

மானிய விலையில் ஊட்டச்சத்து செடிகள்

மானிய விலையில் ஊட்டச்சத்து செடிகள்

மானிய விலையில் ஊட்டச்சத்து செடிகள்

ADDED : ஜூலை 05, 2024 12:15 AM


Google News
கோவை:மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், வீட்டுத்தோட்டம் அமைக்க மானிய விலையில் உட்டச்சத்து மிக்க செடிகள் வழங்கப்படவுள்ளன.

மண் வளத்தை பேணி காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான, இயற்கை வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளை ஊக்கப்படுத்தவும், 206 கோடி ரூபாயில், 22 இனங்களுடன் முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற புதிய திட்டம் இந்தாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட தோட்டக்கலைத்துறையில் வீட்டுத்தோட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க செடிகளை வளரப்பதை ஊக்குவிக்கும் வகையில் வாழை, முருங்கை, பப்பாளி, கறிவேப்பிலை ஆகிய நான்கு வகை செடிகள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன. ஒரு குடும்பத்திற்கு ஒரு தொகுப்பு வழங்கப்படுகிறது. ரூ.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நான்கு செடிகளின் விலை மானியத்தில் ரூ. 15 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஊட்டச்சத்து மிக்க செடிகளின் தொகுப்பை பெற, பொது மக்கள், விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us