/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிராமங்களில் பாழடைந்த சுகாதார வளாகங்கள்: புதுப்பிக்க தேவை சிறப்பு திட்டம்கிராமங்களில் பாழடைந்த சுகாதார வளாகங்கள்: புதுப்பிக்க தேவை சிறப்பு திட்டம்
கிராமங்களில் பாழடைந்த சுகாதார வளாகங்கள்: புதுப்பிக்க தேவை சிறப்பு திட்டம்
கிராமங்களில் பாழடைந்த சுகாதார வளாகங்கள்: புதுப்பிக்க தேவை சிறப்பு திட்டம்
கிராமங்களில் பாழடைந்த சுகாதார வளாகங்கள்: புதுப்பிக்க தேவை சிறப்பு திட்டம்
ADDED : பிப் 23, 2024 11:14 PM

குடிமங்கலம்:கிராமங்களில் பயன்பாடு இல்லாமல், பாழடைந்துள்ள மகளிர் சுகாதார வளாகங்களை புதுப்பித்து, பயன்பாட்டு கொண்டு வர எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக அரசு, கிராமப்புற மகளிர் சுகாதார மேம்பாட்டுக்காக, பல்வேறு திட்டங்களை முன்பு செயல்படுத்தியது. குறிப்பாக, 2001 - 2004 ம் ஆண்டுகளில், ஊராட்சி தோறும், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டது.
இந்த வளாகத்தில், 10 கழிப்பிடம், 3 குளியலறை, மின்மோட்டார் அறை, துணி துவைக்க தேவையான கல் மேடை, எரியூட்டி ஆகிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
ஊராட்சிகள் சார்பில், தண்ணீர் இணைப்பு வழங்கி பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த சுகாதார வளாக திட்டத்தால், கிராமப்புற மகளிர் அதிகளவு பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில், சில ஊராட்சிகளில், தண்ணீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட காரணங்களால், சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தொடர் புகார்கள் எழுந்ததையடுத்து, வட்டார அளவிலான குழுக்கள் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டது.
சுகாதார வளாகங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான, கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பினர்.
அதன் அடிப்படையில், ஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், மகளிர் சுகாதார வளாகங்கள் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.தொடர் பராமரிப்பு இல்லாத நிலையில், தற்போதும் பெரும்பாலான ஊராட்சிகளில், சுகாதார வளாகங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி, பாழடைந்து வருகிறது.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, சில ஊராட்சிகளில், வளாகம் இருந்த சுவடே இல்லாமல், இடித்து அகற்றப்பட்டு விட்டது.
சில கிராமங்களில், இன்னமும், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால், பெண்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பல்வேறு நடைமுறை சிக்கல்களால், அனைத்து வீடுகளிலும், தனி நபர் இல்ல கழிப்பிடம் கட்டப்படவில்லை.
எனவே, வட்டார வாரியாக சிறப்பு குழுக்கள் அமைத்து, கிராமங்களில், பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள மகளிர் சுகாதார வளாகங்களை கண்டறிந்து சிறப்பு திட்டத்தின் கீழ், புதுப்பிக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.