/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவிக்கரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவிக்கரம்
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவிக்கரம்
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவிக்கரம்
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவிக்கரம்
ADDED : ஜன 02, 2024 11:28 PM
பொள்ளாச்சி;போளிகவுண்டன்பாளையத்தில் செயல்படும், அன்னை தெரசா, தென்றல், செண்பகம், செம்பருத்தி, பூந்தென்றல் உள்ளிட்ட ஐந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு பிரெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
மகளிர் திட்ட அலுவலக இயக்க மேலாளர் முருகன், அரசு மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயேன் முன்னிலை வகித்தனர். மகளிர் சுய உதவிக்குழுக்கள், சுந்தரகவுண்டனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உதவி செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும், 350 பேருக்கு, பிரெட், ரஸ்க், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மேலும், சினேகாலயம் மனநலவாழ்வு மையத்தில், உணவு பொருட்கள் வழங்கப்பட்டதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் தெரிவித்தனர்.