/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வருவாய் வழி திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 7,500 பேர் பங்கேற்புவருவாய் வழி திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 7,500 பேர் பங்கேற்பு
வருவாய் வழி திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 7,500 பேர் பங்கேற்பு
வருவாய் வழி திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 7,500 பேர் பங்கேற்பு
வருவாய் வழி திறனாய்வு தேர்வு மாவட்டத்தில் 7,500 பேர் பங்கேற்பு
ADDED : ஜன 31, 2024 12:23 AM
கோவை;கோவை மாவட்டத்தில், தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு எழுத, 7 ஆயிரத்து 593 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மாநில பாடத்திட்டம் படிக்கும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான இத்தேர்வுக்கு அறிவிப்பு, கடந்த டிச., மாதம் வெளியானது.
இதற்கு விண்ணப்பித்த 7 ஆயிரத்து 593 பேருக்கு, ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. வரும் 3ம் தேதி நடக்கும் இத்தேர்வுக்கு, 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அறை கண்காணிப்பு, முதன்மை கண்காணிப்பு பணிகளுக்கு, ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கான அறிவிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
எவ்வித முறைகேடும் நடக்காத வகையில், தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்தார்.