/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 350 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது 350 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது
350 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது
350 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது
350 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது
ADDED : செப் 23, 2025 05:16 AM
தொண்டாமுத்தூர்; காருண்யா நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சிறுவாணி மெயின் ரோடு, தொம்பிலிபாளையம் வழியாக சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கொண்டு செல்வதாக, ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஒரு கார் மற்றும் பைக்கை சோதனை செய்தனர். சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.
காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, குட்கா பொருட்களை கடத்தி சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த ஐயப்பன், 29, திருப்பூரை சேர்ந்த ராஜா, 32, தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ரமேஷ் குமார், 44 ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.