ADDED : செப் 22, 2025 10:16 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட, 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, நாட்டுக்கல்பாளையத்தில் கோமங்கலம்புதுார் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட, 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, நான்கு சேவல்கள், 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.