/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி மாணவர்களுக்கு யோகா விழிப்புணர்வு பள்ளி மாணவர்களுக்கு யோகா விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு யோகா விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு யோகா விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு யோகா விழிப்புணர்வு
ADDED : ஜூன் 22, 2024 12:24 AM
கோவை:ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா செயல் விளக்க நிகழ்வு நடைபெற்றது. பள்ளி முதல்வர் பங்கஜ் தலைமை வகித்து, நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
யோகா என்பது ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமின்றி, உடல், மனம் வள மேம்பாட்டையும் உறுதி செய்யும் பயிற்சி என, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில்,யோக ஆசனங்கள், தியானம், மூச்சுப்பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர். மாவட்ட துணை கலெக்டர் அன்கீத் குமார் ஜெயின், கோவை நலச்சங்க துணைத்தலைவர் கமலேஷ் பாவ்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.