/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆடி மாதம் பிறப்பு கோவில்களில் வழிபாடு ஆடி மாதம் பிறப்பு கோவில்களில் வழிபாடு
ஆடி மாதம் பிறப்பு கோவில்களில் வழிபாடு
ஆடி மாதம் பிறப்பு கோவில்களில் வழிபாடு
ஆடி மாதம் பிறப்பு கோவில்களில் வழிபாடு
ADDED : ஜூலை 17, 2024 08:42 PM

வால்பாறையில், ஆடி முதல் நாளான நேற்று, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி சன்னதியில், ஆடி மாதம் முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அதனை தொடர்ந்து அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதே போல் வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலிலும், நேற்று சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.
உடுமலை: குறிஞ்சேரியில் ஸ்ரீ பூமிலட்சுமி அம்மன் மற்றும் ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி, சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் நாச்சியார் பூமி லட்சுமி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதே போல், உடுமலை மாரியம்மன் கோவில், கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில், உட்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
- நிருபர் குழு -