/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்மேற்கு பருவமழை தீவிரம்; அணைகளின் நீர்மட்டம் உயர்வு தென்மேற்கு பருவமழை தீவிரம்; அணைகளின் நீர்மட்டம் உயர்வு
தென்மேற்கு பருவமழை தீவிரம்; அணைகளின் நீர்மட்டம் உயர்வு
தென்மேற்கு பருவமழை தீவிரம்; அணைகளின் நீர்மட்டம் உயர்வு
தென்மேற்கு பருவமழை தீவிரம்; அணைகளின் நீர்மட்டம் உயர்வு
ADDED : ஜூலை 17, 2024 08:43 PM

வால்பாறை : வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
வால்பாறையில் கடந்த நான்கு நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கனமழையினால், வால்பாறை - ஆழியாறு ரோட்டில் நேற்றும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான, மேல்நீராறு, கீழ்நீராறு, கூழாங்கல்ஆறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 140.83 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், 12 அடி உயர்ந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு, 7,753 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,069 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ.,): சோலையாறு - 62, பரம்பிக்குளம் - 36 ஆழியாறு - 15, வால்பாறை - 69, மேல்நீராறு - 105, கீழ்நீராறு - 74, காடம்பாறை - 32 மேல்ஆழியாறு - 5, மணக்கடவு- 20, துணக்கடவு - 28, சர்க்கார்பதி- 20, வேட்டைக்காரன்புதுார் - 14, பெருவாரிப்பள்ளம் - 32, பொள்ளாச்சி - 15, நவமலை - 10 என்ற அளவில் மழை பெய்தது.