/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி, பல்கலை, கல்லுாரிகளில் உலக யோகா தின விழா! பள்ளி, பல்கலை, கல்லுாரிகளில் உலக யோகா தின விழா!
பள்ளி, பல்கலை, கல்லுாரிகளில் உலக யோகா தின விழா!
பள்ளி, பல்கலை, கல்லுாரிகளில் உலக யோகா தின விழா!
பள்ளி, பல்கலை, கல்லுாரிகளில் உலக யோகா தின விழா!

அரசு மகளிர் கல்லுாரி
புலியகுளத்தில் உள்ள கோவை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முதல்வர் வீரமணி தலைமை வகித்தார். நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். உடல் மற்றும் மனநல மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், 60க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
அவினாசிலிங்கம் பள்ளி
அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.அனைத்து மாணவிகளும் யோகாசன பயிற்சி செய்தனர். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை நளினி பேசுகையில், ''இன்றைக்கு உலகம் முழுவதும், இந்த கலையை பயின்று வருகின்றனர். பள்ளி மாணவிகள் யோகாசன பயிற்சி செய்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
எஸ்.எம்.எஸ்., கல்லூரி
யோகா நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) பாக்கியலட்சுமி தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் பாலசுப்பிரமணி, யோகா பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்து, பயிற்சி அளித்தார். மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.