/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிராமத்தில் உரிமமின்றி இறைச்சி கடைகள் கோர்ட் உத்தரவு பின்பற்றப்படுமா? கிராமத்தில் உரிமமின்றி இறைச்சி கடைகள் கோர்ட் உத்தரவு பின்பற்றப்படுமா?
கிராமத்தில் உரிமமின்றி இறைச்சி கடைகள் கோர்ட் உத்தரவு பின்பற்றப்படுமா?
கிராமத்தில் உரிமமின்றி இறைச்சி கடைகள் கோர்ட் உத்தரவு பின்பற்றப்படுமா?
கிராமத்தில் உரிமமின்றி இறைச்சி கடைகள் கோர்ட் உத்தரவு பின்பற்றப்படுமா?
ADDED : ஜூன் 05, 2024 08:50 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், உரிமம் இன்றி செயல்படும் இறைச்சிக் கடைகளைக் கண்டறிந்து தடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளில், புதிது புதிதாக இறைச்சிக் கடைகள் திறக்கப்படுகின்றன. குறிப்பாக, ஞாயிறு மற்றும் முக்கிய பண்டிகை தினங்களின் போது, ஆங்காங்கே கோழி, மாடு மற்றும் மீன் இறைச்சி விற்பனை தொடர்கிறது.
இங்கு எவ்வித விதிமுறைகளும் பின்பற்றப்படுவது கிடையாது. குறிப்பாக, ரோட்டோரத்தில், திறந்தவெளியில் இக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
நகரப்பகுதியில், ஆடு வதை கூடம் அமைக்கப்பட்டு, இறைச்சி விற்பனைக்கு தனியிடம் ஒதுக்கீடு செய்வதுடன், விற்பனையாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல், கிராமங்களில் திறந்தவெளியில் ஆடுகளை வதை செய்கின்றனர். சுகாதாரமற்ற இடங்களில், இறைச்சிக் கடைகள் செயல்படுகின்றன. மேலும், அங்கு சேகரமாகும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதும் கிடையாது. மாறாக, மூட்டை மூட்டையாக கட்டி, பொது இடங்களில் வீசப்படுகிறது.
இதனால், நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். எனவே, உரிமம் இன்றி செயல்படும் இறைச்சிக் கடைகளைக் கண்டறிந்து தடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'கிராம ஊராட்சிகளில் இறைச்சிக் கடை நடத்த உரிமம் தேவை என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உரிமம் இன்றி செயல்படும் இறைச்சிக் கடைகளைக் கண்டறிய வேண்டும்.
விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவும், தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்,' என்றனர்.