/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நிழற்கூரை இல்லாததால் தவிப்பு ஒன்றிய நிர்வாகம் கவனிக்குமா? நிழற்கூரை இல்லாததால் தவிப்பு ஒன்றிய நிர்வாகம் கவனிக்குமா?
நிழற்கூரை இல்லாததால் தவிப்பு ஒன்றிய நிர்வாகம் கவனிக்குமா?
நிழற்கூரை இல்லாததால் தவிப்பு ஒன்றிய நிர்வாகம் கவனிக்குமா?
நிழற்கூரை இல்லாததால் தவிப்பு ஒன்றிய நிர்வாகம் கவனிக்குமா?
ADDED : ஜூலை 19, 2024 01:41 AM

உடுமலை;ஆலாம்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை இல்லாததால், கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடுமலை - மூணாறு ரோட்டில், ஆலாம்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது. ஆலாம்பாளையத்துக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், அக்கிராம மக்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு மக்கள், இந்த பஸ் ஸ்டாப்புக்கு வந்து பஸ் ஏறிச்செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த நிழற்கூரை போதிய பராமரிப்பின்றி இருந்ததால், பள்ளபாளையம் ஊராட்சி நிர்வாகத்தால் இடித்து அகற்றப்பட்டது.
மீண்டும் அப்பகுதியில், நிழற்கூரை கட்டப்படவில்லை. இதனால், மழைக்காலத்தில், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் ஆய்வு செய்து அப்பகுதியில், நிழற்கூரை அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.