/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதுசா போட்ட ரோட்டில் பொத்தல் பாதாள சாக்கடையை சரிபண்ணுங்க புதுசா போட்ட ரோட்டில் பொத்தல் பாதாள சாக்கடையை சரிபண்ணுங்க
புதுசா போட்ட ரோட்டில் பொத்தல் பாதாள சாக்கடையை சரிபண்ணுங்க
புதுசா போட்ட ரோட்டில் பொத்தல் பாதாள சாக்கடையை சரிபண்ணுங்க
புதுசா போட்ட ரோட்டில் பொத்தல் பாதாள சாக்கடையை சரிபண்ணுங்க
ADDED : ஜூலை 19, 2024 01:42 AM

பொள்ளாச்சி;குடியிருப்புகள், வணிக நிறுவனங்களின் வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர், பாதாள சாக்கடை இணைப்புக்குள் செல்வதைக் கண்டறிந்து தடுக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில், கடந்த, 2016ல், பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. சந்தை பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட நிலையில், அடைப்பு, சீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்காங்கே ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முறையான பராமரிப்பு இல்லாததால், ஆங்காங்கே அமைந்துள்ள ஆளிறங்கு குழியின் மூடி சேதடைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
இதுஒருபுறமிருக்க, நகரில் மழை பெய்யும் போது, பாதாள சாக்கடையின் ஆளிறங்கு குழாயின் மூடியின் வழியே கழிவுநீர் வெளியேறுவதால், பொதுமக்கள் பாதிக்கின்றனர்.
மேலும், புதிதாக தார் ரோடு அமைத்த பகுதிகளில், பாதாள சாக்கடை குழிகளில் இருந்து மழைநீரும், கழிவுநீரும் வெளியேறுவதால், ரோடு உருக்குலைந்து வருகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
குடியிருப்புகள், வணிக நிறுவனங்களின் வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர், பாதாள சாக்கடை இணைப்புகளுக்குள் செல்கிறதா என, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.
ஒரு சிலர், பாதாள சாக்கடைக்குள் மழைநீரைக் கொண்டும் செல்லும் வகையில் இணைப்பு வழங்கியுள்ளதாக புகார் எழுகிறது. இது போன்ற அத்துமீறலால் மழை காலங்களில் நகரில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து, பாதாள சாக்கடையில் மூடி வழியாக வெளியேறுகிறது. இதனால், சுகாதாரம் பாதிக்கிறது.
எனவே, கட்டடங்களில் மழை நீரை சேமிக்க தனியாக தொட்டி அமைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.கழிவுநீர் மட்டுமே பாதாள சாக்கடைக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். இப்பிரச்னையால், புதிதாக போடப்பட்ட தார் ரோடும் உருக்குலைவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.