Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கனவு இல்லம் நனவாகுமா! கடும் விதிமுறையால் அதிருப்தி

கனவு இல்லம் நனவாகுமா! கடும் விதிமுறையால் அதிருப்தி

கனவு இல்லம் நனவாகுமா! கடும் விதிமுறையால் அதிருப்தி

கனவு இல்லம் நனவாகுமா! கடும் விதிமுறையால் அதிருப்தி

ADDED : ஜூன் 28, 2024 11:29 PM


Google News
அன்னுார்;அன்னூர் ஒன்றியத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கனவு இல்லம் திட்டத்தின் விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

கிராமப்புற வீடுகள் பழுது பார்க்கும் திட்டம் மற்றும் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யவும், ஒப்புதல் பெறவும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த, ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியிருந்தது.

அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் இரு திட்டங்களிலும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காரே கவுண்டம்பாளையம், கஞ்சப்பள்ளி, குன்னத்துார் உள்ளிட்ட ஊராட்சி கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பேசுகையில், 'கனவு இல்லம் திட்டத்தில் அரசு விதிமுறைகள் கடுமையாக உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் சொந்த வீடு இல்லாமல், 300-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆனால், அரசு விதிமுறைப்படி ஒரு ஊராட்சிக்கு சராசரியாக வெறும் ஐந்து பேர் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 99 சதவீதம் பேர் ஏமாற்றம் அடைந்துள்ளோம். அரசு சொந்த நிலம், வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டி தர வேண்டும். மேலும், வீடு பழுது பார்க்கும் திட்டத்தில், 2001ம் ஆண்டுக்கு முன் அரசால் கட்டித் தரப்பட்ட வீட்டுக்கு மட்டுமே பழுதுபார்க்க பணம் தரப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த விதிமுறையால் 90 சதவீதம் பேர் பயனடைய முடியாத நிலை உள்ளது. அரசு கட்டித் தரும் வீடுகள், 10 ஆண்டுகளிலேயே பழுது ஏற்பட்டு விடுகிறது.

மேற்கூரை சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. எனவே, 10 ஆண்டுகளுக்கு மேலான தொகுப்பு வீடுகளை பழுது பார்க்க நிதி ஒதுக்க வேண்டும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us