/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறப்பு கிராம சபை மருதுாரில் கூட்டம் சிறப்பு கிராம சபை மருதுாரில் கூட்டம்
சிறப்பு கிராம சபை மருதுாரில் கூட்டம்
சிறப்பு கிராம சபை மருதுாரில் கூட்டம்
சிறப்பு கிராம சபை மருதுாரில் கூட்டம்
ADDED : ஜூன் 28, 2024 11:30 PM
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், மருதுார் ஊராட்சியில் தமிழக அரசின் ஆணைப்படி கனவு இல்லம் திட்டம் குறித்து, நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா தலைமை ஏற்று நடத்தினார். மக்கள் ஆர்வத்தோடு கிராம சபையில் கலந்து கொண்டு, புதிய வீடு வேண்டும் என, 72 மனுக்கள் கொடுத்தனர்.
மருதுார் சிவன்புரம் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர், கனவு இல்லம் கணக்கெடுப்பில் தங்கள் பெயர்கள் வரவில்லை என்று கூறி எங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மனு அளித்தனர். மீண்டும் சர்வே செய்து கணக்கெடுப்பில் விடுபட்டவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மக்கள் பலரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.