/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டுமானத்தை முடிக்க எதுக்கு அவசரம்? எச்சரிக்கிறார் கட்டுமான பொறியாளர் கட்டுமானத்தை முடிக்க எதுக்கு அவசரம்? எச்சரிக்கிறார் கட்டுமான பொறியாளர்
கட்டுமானத்தை முடிக்க எதுக்கு அவசரம்? எச்சரிக்கிறார் கட்டுமான பொறியாளர்
கட்டுமானத்தை முடிக்க எதுக்கு அவசரம்? எச்சரிக்கிறார் கட்டுமான பொறியாளர்
கட்டுமானத்தை முடிக்க எதுக்கு அவசரம்? எச்சரிக்கிறார் கட்டுமான பொறியாளர்
ADDED : ஜூலை 19, 2024 11:38 PM

''கட்டடத்தில் பணிகளை அவசர கதியில் முடிக்க வேண்டாம். கான்கிரீட் கியூரிங் காலத்தையும் குறைத்து விட வேண்டாம்,'' என எச்சரிக்கிறார், கோயமுத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க (காட்சியா) பொருளாளர் மணிகண்டன்.
வீட்டில் முதல் மாடி புதிதாக கட்ட உள்ளேன். ஏற்கனவே சுருக்கி கொண்டு தான் தளம் போட்டுள்ளேன். தற்போது செங்கல் சுவர் கட்டும் போது, அவற்றை மொத்தமாக எடுத்து விட வேண்டுமா அல்லது சுவர்கள் வரும் பாகத்தை மட்டும் எடுத்தால் போதுமா?
- சம்பத், சுந்தராபுரம்.
தங்கள் கட்டடத்தில் ஏற்கனவே போடப்பட்டுள்ள சுருக்கியை முழுவதுமாக எடுத்து விடுவது நல்லது. ஆனால், தற்போதைக்கு மேல் மாடியில் புதிய செங்கல் சுவர் வரும் இடங்களை மட்டும் மார்க் செய்து, கட்டிங் மெஷின் கொண்டு எடுத்துவிட்டு, மேல்மாடி ரூப் கான்கிரீட் போட்டு முடித்து தளத்துக்கு டைல்ஸ் பதிக்கும் போது, அனைத்து சுருக்கி தளத்தையும் அகற்றி விடவும். அப்போது தான், டைல்ஸ் பதிக்கும் போது சரியான மட்டத்தில் பதிக்க முடியும். முதல் தளம் கான்கிரீட் போடும் வரை, கீழ்த்தளத்துக்கு வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.
கட்டடம் கட்டி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பாத்ரூம் கதவு களில் உட்புறம் நீர் பட்டு பாதித்து விட்டது. இவற்றை மாற்ற வேண்டியுள்ளதால், எந்த மாதிரியான கதவுகளை பொருத்தலாம்?
-ஞானசம்பந்தம், கிணத்துக்கடவு.
பைபர் ரீயின்போர்ஸ்டு பிளாஸ்டிக் (FRP) பொருட்களால் தயாரிக்கப்பட்ட கதவுகள், பாத்ரூமுக்கு பிரத்யேகமாக கிடைக்கின்றன. இந்த கதவுகளுக்கு பெயின்ட் அடிக்க தேவையில்லை; பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன. அடிக்கடி பழுதாகாமல், அதிக ஆண்டுகள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.
நான் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடத்தை, விரைவில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளேன். மேற்கூரை கான்கிரீட் முடித்து எத்தனை நாட்களில் பலகையை அகற்ற வேண்டும். கான்கிரீட் தளத்தின் மேற்பரப்பில் ரசாயன கலவையை பயன்படுத்தி விரைவில் முடிக்க முடியுமா?
-நந்தகுமார், வடவள்ளி.
கட்டடத்தில் பணிகளை அவசர கதியில் முடிக்க வேண்டாம். கான்கிரீட் கியூரிங் காலத்தையும் குறைத்து விட வேண்டாம். இது, கட்டடத்தின் உறுதி தன்மையை பாதிக்கும் சூழலை ஏற்படுத்தும். ரூப் சிலாப் கான்கிரீட் முடித்து குறைந்தபட்சம் 18 நாட்களுக்கு பின் தான், அதை தாங்கி நிற்கும் பலகை அகற்ற வேண்டும். இந்த சமயத்தில், இடைப்பட்ட நாட்களில் கான்கிரீட்டில் தினசரி காலை, மாலை இரண்டு நேரம் தண்ணீர் தேக்கி, அதை உறுதிப்படுத்த வேண்டும்.
இப்படி தண்ணீர் தேக்குவதால், கான்கிரீட்டில் நீர் கசிவு இருப்பதை சோதிக்க முடியும். நீர்கசிவு இருந்தால் அதை அடைப்பதற்கு தனியாக சீலென்ட்கள் உள்ளன. இதை வாங்கி பயன்படுத்தினால், நீர் கசிவை நிறுத்தி விடலாம்.
ரசாயன கலவையை பயன்படுத்தி, கான்கிரீட் மேற்கூரையை இறுகச் செய்வதை தவிர்க்கவும். புது தொழில்நுட்பமும், ரசாயனங்கள் சந்தைகளில் வந்தாலும், ஒரு கட்டுமானத்தை நீராற்றுதல் செய்ய, தண்ணீருக்கு ஈடான கெமிக்கல் எதுவும் கிடையாது.