Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ களம் அறிய உதவும் 'தளம்'

களம் அறிய உதவும் 'தளம்'

களம் அறிய உதவும் 'தளம்'

களம் அறிய உதவும் 'தளம்'

ADDED : ஜூலை 19, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
முழுமை திட்ட நில உபயோக வகைப்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள, 'நிலப்பயன் தகவல் அமைப்பு தளம்' உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு, குறிப்பிட்ட நிலம், எவ்வகை பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதை வாங்கலாமா, வேண்டாமா என தெரிந்து கொள்ளலாம் என்பதற்கு வழிவகுத்துள்ளது.

கோவை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தலைவர் லட்சுமணன் கூறியதாவது:

சட்டசபையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கையின் போது, அமைச்சர் பேசுகையில், ''கோவை, திருப்பூர், ஓசூர், மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில், நகர்ப்புற வளர்ச்சி குழுமம் கொண்டு வர ஏற்பாடு செய்து பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

முழுமை திட்ட நில உபயோக வகைப்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள, நிலப்பயன் தகவல் அமைப்பு தளம் உருவாக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். இது, வரவேற்புக்குரியது. இதன் வாயிலாக, குறிப்பிட்ட நிலம், வேளாண்மை, குடியிருப்பு, தொழிற்சாலை உட்பட எவ்வகை பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதை வாங்கலாமா, வேண்டாமா என தெரிந்து கொள்ளலாம். இது, நிலம் வாங்கக்கூடிய நபர்களுக்கு மிகவும் உபயோகமான செய்தியாக இருக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

'கிரடாய்' கோவை துணை தலைவர் அபிஷேக் கூறியதாவது:

300 சதுர மீட்டருக்குள் கட்டட பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்துக்குள் உள்ள அனைத்து வணிக கட்டடங்களுக்கும், கட்டிட நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என, அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2,500 சதுரடி நிலத்தில் 3,500 சதுரடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு இனி கட்டட அனுமதி பெற தேவையில்லை என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்துள்ளார்.

ஆனால், அவர்கள் சுய சான்று வாயிலாக அனுமதி வழங்கப்படும். கட்டட அனுமதி தேவையில்லை என்றாலும், அவர்கள் கட்டட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளது வரவேற்புக்குரியது. இதன் வாயிலாக கால தாமதம் தவிர்க்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us