/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிலுவை, குல்லா, பர்தா அணியாதீர் என சந்துரு அறிக்கை கூறாதது ஏன்? முன்னாள் நீதிபதி கருத்துக்கு இ.மு., கண்டனம் சிலுவை, குல்லா, பர்தா அணியாதீர் என சந்துரு அறிக்கை கூறாதது ஏன்? முன்னாள் நீதிபதி கருத்துக்கு இ.மு., கண்டனம்
சிலுவை, குல்லா, பர்தா அணியாதீர் என சந்துரு அறிக்கை கூறாதது ஏன்? முன்னாள் நீதிபதி கருத்துக்கு இ.மு., கண்டனம்
சிலுவை, குல்லா, பர்தா அணியாதீர் என சந்துரு அறிக்கை கூறாதது ஏன்? முன்னாள் நீதிபதி கருத்துக்கு இ.மு., கண்டனம்
சிலுவை, குல்லா, பர்தா அணியாதீர் என சந்துரு அறிக்கை கூறாதது ஏன்? முன்னாள் நீதிபதி கருத்துக்கு இ.மு., கண்டனம்
ADDED : ஜூன் 23, 2024 04:36 PM

கோவை : முன்னாள் நீதிபதி சந்துரு, அரசுக்கு பரிந்துரை செய்த கருத்துக்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பில், இந்து வியாபாரிகள் நலச்சங்க அறிமுக கூட்டம் மற்றும் இளைஞர்கள் இணைப்பு விழா, ராம் நகரில் உள்ள ஐயப்பன் பூஜா சங்கத்தில் நடந்தது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் இடையே ஜாதி, இன வேறுபாடுகளை களைவதற்கான வழிமுறைகளை வகுக்க, அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர், மாணவ, மாணவியர் நெற்றியில் திலகம், பொட்டு, பூ வைக்கக்கூடாது; கைகளில் கயிறு கட்டக்கூடாது என பரிந்துரைத்துள்ளனர்.
சிலுவை, குல்லா, பர்தா அணியக் கூடாது என கூறாதது ஏன்? நீதிபதி சந்துரு, கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர். இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக, பரிந்துரை செய்துள்ள அவரின் நடவடிக்கையை, வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக, தொடந்து வலியுறுத்தி வருகிறோம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக, கள்ளச் சாராயம் விற்பனை நடந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். மதுபான விற்பனையால், விதவைகள் அதிகரித்து உள்ளதாக தி.மு.க.,வினர் கூறினர். ஆட்சி பொறுப்பேற்ற பின், அக்கருத்தை காற்றில் பறக்கவிடுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில், சரியான பராமரிப்பு இல்லாததே தேர் கயிறு அறுந்து விழ காரணம். மக்கள் இழுத்ததால், கயிறு அறுந்து விழத்தான் செய்யும் என, அறநிலையைத் துறை அமைச்சர் பொறுப்பில்லாமல் பதிலளித்து உள்ளார்.
பொறுப்பில்லாமல் பேசுபவருக்கு அமைச்சர் பதவி எதற்கு? அவர் ராஜினாமா செய்ய வேண்டும். கள் உடலுக்கு நல்லது என கூறுகின்றனர். தமிழகத்தில் கள்ளுக்கு அனுமதி கொடுத்தால் விவசாயிகள் பயன் பெறுவர்.
இவ்வாறு, அவர் கூறினார்
இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் துணைத் தலைவர் பரமசிவம், இந்து வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் பழனி ஜெகன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.