/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லுாரிகள் எவை? மாநில விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லுாரிகள் எவை?
மாநில விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லுாரிகள் எவை?
மாநில விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லுாரிகள் எவை?
மாநில விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லுாரிகள் எவை?
ADDED : ஜூன் 30, 2024 12:45 AM

கோவை;பாராமெடிக்கல் கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளின் பல்வேறு கல்லுாரி மாணவர்கள் சிறப்பாக விளையாடி, கோப்பையை வென்றனர்.
எஸ்.என்.எஸ்., பாராமெடிக்கல் கல்லுாரி சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 53 கல்லுாரிகளை சேர்ந்த,2500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.மாணவ மாணவியருக்கு வாலிபால், கோ கோ, கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, கபடி, டென்னிகாய்ட், த்ரோபால் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதிப்போட்டி முடிவுகள்:
n மாணவியர் பிரிவில், கோ கோ போட்டியில் எஸ்.என்.எஸ்., பாராமெடிக்கல் கல்லுாரி அணி 11 - 2 என்ற புள்ளிக்கணக்கில் கே.எம்.சி.எச்., பார்மசி அணியை வீழ்த்தியது.
n இறகுப்பந்து போட்டியில் எஸ்.என்.எஸ்., பாராமெடிக்கல் கல்லுாரி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் இந்துஸ்தான் நர்சிங் கல்லுாரி அணியை வீழ்த்தியது.
n த்ரோபால் போட்டியில் கே.எம்.சி.எச்., கல்லுாரி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் எஸ்.என்.எஸ்., பாராமெடிக்கல் கல்லுாரியை வீழ்த்தியது.
n டென்னிகாய்ட் போட்டியில் பி.பி.ஜி., பிசியோதெரபி கல்லுாரி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் எஸ்.என்.எஸ்., கல்லுாரியை வீழ்த்தியது.
n வாலிபால் போட்டியில், பி.பி.ஜி., கல்லுாரி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ லட்சுமி கல்லுாரியை வீழ்த்தியது.
n மாணவர் பிரிவு கபடியில், தஞ்சாவூர் டாக்டர் கலாம் பார்மசி கல்லுாரி அணி 26 - 25 என்ற புள்ளிக்கணக்கில் கே.எம்.சி.எச்., பார்மசி கல்லுாரி அணியை வீழ்த்தியது.
n கால்பந்தில் கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லுாரி அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வேலுார் சந்தியா ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியை வீழ்த்தியது.
n வாலிபால் போட்டியில் சேலம், விநாயகா மிசன் கல்லுாரி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் சென்னை ஜெயா பார்மசி கல்லுாரியை வீழ்த்தியது.
n இறகுப்பந்து போட்டியில் கே.ஜி., பிசியோதெரபி கல்லுாரி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ அபிராமி பார்மசி கல்லுாரியை வீழ்த்தியது.
வெற்றி பெற்றவர்களுக்கு, துணை கமிஷனர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் செந்துாரபாண்டியன், பாராமெடிக்கல் கல்லுாரி முதல்வர்கள் சதீஷ், ராஜா செந்தில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.