Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ காணாமல் போன கடுகு டப்பாக்கள்!

காணாமல் போன கடுகு டப்பாக்கள்!

காணாமல் போன கடுகு டப்பாக்கள்!

காணாமல் போன கடுகு டப்பாக்கள்!

UPDATED : ஜூன் 30, 2024 06:10 PMADDED : ஜூன் 30, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
பாட்டிகளும், அம்மாக்களும் கடுகு டப்பாக்களில் சேமித்த சில்லரைகள்... கஷ்டமான சூழலில் கரம் கொடுக்க தவறியதில்லை.

சேமிப்பு என்பது, நம் வாழ்வியலில் கலந்த ஒன்றாக இருந்தது. சேமிப்பு போக செலவு என்று இருந்த சூழல் இருந்தது.

இப்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வந்த பின்னர் நமது சேமிப்பு, செலவுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இளைஞர்கள் மத்தியில் சேமிப்பு இல்லாமல் போன அதே சமயம், குழந்தைகள் மத்தியில் சேமிப்பு என்பது பற்றிய விழிப்புணர்வு துளியும் இல்லை.

இச்சூழல் தொடரும் பட்சத்தில், இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான சரிவை எதிர்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிதி வல்லுநர்கள்.

முன்பெல்லாம் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மத்தியில், ஒரு பென்சில் வாங்க வேண்டும் என்றாலும் ஒரு வாரம் காத்திருப்பார்கள். தற்போது, ஒன்றுக்கு பத்தாக கேட்டவை எல்லாம் வாங்கிக்கொடுத்து விடுகிறோம்.

வாங்கிக்கொடுக்கும் பொருட்களை, பாதுகாத்து வைக்கும் எண்ணமும் குழந்தைகளிடம் இருப்பதில்லை. இதுபோன்று, சேமிப்பு என்ற வழக்கத்தை, நம்மை அறியாமலேயே தொலைத்து வருகிறோம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பட்டய கணக்காளர் நிறுவனத்தின் மாநில செயலர் ஜலபதி என்ன சொல்கிறார்?

வளர்ந்த நாடுகளை காட்டிலும், டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் கட்டுப்பாடு என்பது இல்லாமல் போனது. கடந்த காலங்களில், சேமிப்பு போக செலவு என்று இருந்தது. தற்போது, சேமிப்பு குறைந்து விட்டது.

உலகளவில், பல பொருளாதார இன்னல்கள் வந்த சமயங்களில், இந்தியா பெரிய பாதிப்பின்றி தப்பித்துக் கொண்டதற்கு, சேமிப்பே அடித்தளமாக இருந்தது. ஆனால், இனிவரும் காலங்களில் சற்று சிரமமே.

தற்போது, சேமிப்பு என்பதற்கு பல வழிகள் உள்ளன. நிலம், தங்கம், மியூச்சுவல் பண்டு, பங்குச்சந்தை, ஆர்.டி., போன்றவற்றில் கலந்து முதலீடு செய்ய வேண்டும். ஒன்றில் மட்டும் முதலீடு செய்வது தவறானது.

கடந்த காலங்களில், தபால்துறை வாயிலாக பள்ளிகளில் சேமிப்பு பழக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மீண்டும், பாடத்திட்டங்களில் சேமிப்பு குறித்த முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், சேமிப்பு சார்ந்த போட்டிகளை நடத்தி, ஊக்கப்படுத்த வேண்டியது கட்டாயம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில், தபால்துறை வாயிலாக பள்ளிகளில் சேமிப்பு பழக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மீண்டும், பாடத்திட்டங்களில் சேமிப்பு குறித்த முக்கியத்துவத்தை உணர்த்துவதுடன், சேமிப்பு சார்ந்த போட்டிகளை நடத்தி, ஊக்கப்படுத்த வேண்டியது கட்டாயம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us