/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாரதி பார்க் யோகா மையத்துக்கு பூட்டு மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? பாரதி பார்க் யோகா மையத்துக்கு பூட்டு மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்?
பாரதி பார்க் யோகா மையத்துக்கு பூட்டு மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்?
பாரதி பார்க் யோகா மையத்துக்கு பூட்டு மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்?
பாரதி பார்க் யோகா மையத்துக்கு பூட்டு மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்?
ADDED : ஜூன் 24, 2024 12:54 AM

கோவை:பாரதி பார்க் வளாகத்தில் ஓராண்டுக்கும் மேலாக பூட்டப்பட்டிருக்கும், மாநகராட்சி யோகா மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர, கோரிக்கை எழுந்துள்ளது.
மாநகராட்சி, 69வது வார்டில் உள்ள பாரதி பார்க் தினமும் காலை, 5:30 முதல், 11:00 மணி வரையும், மாலை, 4:00 முதல் இரவு, 7:00 மணி வரை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்படுகிறது. இப்பூங்கா வளாகத்தில்மாநகராட்சி சார்பில், யோகா மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை, இந்த மையத்தில் தினமும், 50க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்து பயன்பெற்று வந்தனர்.
கொரோனாவுக்கு பிறகு இது மூடப்பட்டுள்ளதால், யோகாசனம் செய்ய முடியாமல் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
யோகாசனம் செய்வோர் கூறுகையில், 'கொரோனா பாதிப்புக்கு பின், இயல்பு நிலை திரும்பி ஆண்டுகளை கடந்து விட்டது. ஆனாலும், இந்த யோகா மையம் மூடியே கிடக்கிறது. யோகா செய்வதால், பலவித நன்மைகள் கிடைக்கின்றன.
வீடுகளில் அமைதியான சூழல் இல்லாததால், இங்கு வந்து யோகா செய்து வந்தோம். மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த யோகா மையத்தை திறந்தால், ஏராளமானோர் பயன்பெறுவர்' என்றனர்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''யோகா மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.