/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொள்ளாச்சியில் சுகாதாரம் என்ன விலை? மூட்டை மூட்டையாக குப்பை தேக்கம் மக்கள் நலன் காக்க முன்வருமா நகராட்சி பொள்ளாச்சியில் சுகாதாரம் என்ன விலை? மூட்டை மூட்டையாக குப்பை தேக்கம் மக்கள் நலன் காக்க முன்வருமா நகராட்சி
பொள்ளாச்சியில் சுகாதாரம் என்ன விலை? மூட்டை மூட்டையாக குப்பை தேக்கம் மக்கள் நலன் காக்க முன்வருமா நகராட்சி
பொள்ளாச்சியில் சுகாதாரம் என்ன விலை? மூட்டை மூட்டையாக குப்பை தேக்கம் மக்கள் நலன் காக்க முன்வருமா நகராட்சி
பொள்ளாச்சியில் சுகாதாரம் என்ன விலை? மூட்டை மூட்டையாக குப்பை தேக்கம் மக்கள் நலன் காக்க முன்வருமா நகராட்சி

பணிகள் பிரிப்பு
குப்பை சேகரிக்க, பேட்டரி ஆட்டோ மாதிரியான வாகனங்கள், சரக்கு வாகனங்கள் (மினி லாரி), டிப்பர் லாரிகளை கொண்டு குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பை சேகரிப்பு பணிகள், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளில், குப்பை சேகரித்து தரம் பிரித்து வழங்கும் பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தினமும் 30 டன்!
நகராட்சி பகுதியில், ஒரு நாளுக்கு, ஒன்பது டன் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட,30 டன்னுக்கும் அதிகமாக கழிவுகள் சேகரமாகின்றன. அதில், தனியார் வாயிலாக, 22.75 டன் குப்பை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துாய்மையில்லை
பாலகோபாலபுரம் வீதி, நேதாஜி ரோடு, பல்லடம் ரோடு, மார்க்கெட் ரோடு மற்றும் நியூஸ்கீம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அருகே என, நகரின் பல இடங்களில் மூட்டை மூட்டையாக குப்பை கழிவுகள் தேக்கமடைந்து கிடக்கின்றன. இதற்கு ஒரு விடிவு கிடைக்காத சூழல் உள்ளது.
புதர் சூழ்ந்தது
நகரில் உள்ள பெரும்பாலான சாக்கடை கால்வாய்கள்அடைத்துள்ளதுடன், புதர் மண்டி காணப்படுகின்றன. முறையாக சுத்தம் செய்யாமல் உள்ளதால், கொசுத்தொல்லை, பூச்சிகளின் தொல்லையால் மக்கள் சிரமப்படுவது வாடிக்கையாக உள்ளது.