Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'வெட்டி வேலை வீராச்சாமி'ஆக மாறிய மாநகராட்சி!

'வெட்டி வேலை வீராச்சாமி'ஆக மாறிய மாநகராட்சி!

'வெட்டி வேலை வீராச்சாமி'ஆக மாறிய மாநகராட்சி!

'வெட்டி வேலை வீராச்சாமி'ஆக மாறிய மாநகராட்சி!

UPDATED : ஜூன் 20, 2024 07:29 AMADDED : ஜூன் 20, 2024 05:51 AM


Google News
Latest Tamil News
கோவை,: 'வெட்டி வேலை வீராச்சாமி' என்று சொல்வதை போல், சில வேலைகளை, கோவை மாநகராட்சி நிர்வாகம், தலைகீழாக செய்து வருகிறது. இதனால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

தமிழக அளவில் சொத்து வரி வசூலிப்பதில், கோவை மாநகராட்சி முதலிடத்தில் இருக்கிறது. சொத்து வரியாக ரூ.400 கோடி, இதர வரியினங்கள் மற்றும் குத்தகை, ஏல இனங்கள் வாயிலாக ரூ.200 கோடி என, 600 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.

மாநில அளவில் உள்ளாட்சி அமைப்புகளில், இவ்வளவு ரூபாய் வரியினங்களில் வருவாய் ஈட்டி சாதித்துக் காட்டியது, மாநகராட்சி நிர்வாகம்.

இது தவிர, மத்திய - மாநில அரசுகளால் திட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்நிதியை சரியாக பயன்படுத்தாமல், சரியான மேலாண்மை இல்லாததால், வீணடித்து வருகிறது.

ரோட்டில் தண்ணீர் பாய்வது ஏன்?


மாநகராட்சி பொறியியல் பிரிவு மூலமாக, செய்யப்படும் பணிகள் முறையாக கள ஆய்வு செய்யப்படுவதில்லை. அவ்வாறு செய்தாலும் விதிமுறைக்கு உட்பட்டு பணிகள் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை பார்ப்பதில்லை.

உதாரணத்துக்கு, மழை நீர் வடிகால் கட்டும்போது, ஒரு மீட்டர் ஆழத்துக்கு கட்டியிருந்தால் மட்டுமே சிலாப் அமைக்க வேண்டும்; 15 அடி இடைவெளிக்கு ஒரு மேனுவல் இருக்க வேண்டும். அதாவது, வடிகாலுக்குள் ஒருவர் இறங்கி, துார்வாருவதற்கான வசதி ஏற்படுத்த வேண்டும்.

செலவினத்தை குறைப்பதற்காக, அத்தகைய மேனுவல் பல இடங்களில் அமைக்கவில்லை. இதன் காரணமாக, மழை நீர் வடிகால் துார்வாராமல் விடப்பட்டதால், மண் மேவி, தண்ணீர் ரோட்டில் வழிந்தோடியது.

இப்பிரச்னை கண்டறியப்பட்டதும், பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் சிலாப் உடைக்கப்பட்டு, துார்வாரப்பட்டது. அவ்வாறு உடைக்கப்பட்ட மழை நீர் வடிகால் சிலாப்கள், மூடப்படாமல் இருக்கின்றன.

தோண்டப்படும் ரோடுகள்


இதேபோல், பாதாள சாக்கடை மேனுவல் உயரத்தை அதிகரிக்க, ஆங்காங்கே மீண்டும் ரோடு தோண்டும் பணி நடக்கிறது. சமீபத்தில், ராம்நகர் காளிங்கராயன் வீதியில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்க ரோடு தோண்டப்பட்டது; பின், பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டப்பட்டது.

வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் ரோடு இருந்ததால், லோக்சபா தேர்தல் சமயத்தில் அவசர அவசரமாக ரோடு போடப்பட்டது. அப்போது, பழைய ரோட்டை முழுமையாக பெயர்த்தெடுக்காமல், 'மில்லிங்' செய்வதாக கூறி, முள் கரண்டியால், ரோட்டை சுரண்டி எடுப்பது போல், கோடு போட்டு, பழைய ரோட்டின் மீதே புதிதாக ரோடு போட்டிருப்பது, தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ரோட்டுக்கு மேல் ரோடு


அதாவது, ரோட்டுக்கு மேல் ரோடு போட்டதால், பாதாள சாக்கடை மேனுவல், ஒன்றரை அடிக்கு கீழாக சென்று விட்டது. இப்போது, பல லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட தார் ரோட்டை தோண்டி, ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை சேம்பரை இடித்து விட்டு, ரோடு மட்டத்துக்கு புதிதாக கட்டி, மூடி போடுவதற்கான பணியை, மாநகராட்சி பொறியியல் பிரிவினர் செய்து வருகின்றனர்.

ரோடு போடுவதற்கு முன்பாகவே, காளிங்கராயன் வீதி ஆரம்பம் முதல் கடைசி வரை, பாதாள சாக்கடை சேம்பர் எங்கெங்கு இருக்கிறது என ஆய்வு செய்து, அப்பகுதியில் பழைய ரோட்டை முழுமையாக பெயர்த்தெடுத்து, மீண்டும் போட்டிருந்தால் இப்பிரச்னை வந்திருக்காது.

தற்போது ரோட்டை பெயர்ப்பதோடு, நல்ல நிலையில் உள்ள பாதாள சாக்கடை சேம்பரை இடித்து, ரோடு மட்ட உயரத்தை அதிகப்படுத்தி, புதிதாக கட்டுகின்றனர்.

பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்தை, எப்படியெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் வீணடிக்கிறார்கள் என்பதற்கு, இவ்விரு வேலைகளும் சிறு உதாரணம்.

ரோட்டுக்கு மேல் ரோடு போட்டதால், பாதாள சாக்கடை மேனுவல், ஒன்றரை அடிக்கு கீழாக சென்று விட்டது. இப்போது, பல லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட தார் ரோட்டை தோண்டி, ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை சேம்பரை இடித்து விட்டு, ரோடு மட்டத்துக்கு புதிதாக கட்டி, மூடி போடுவதற்கான பணியை, மாநகராட்சி பொறியியல் பிரிவினர் செய்து வருகின்றனர்.

வெட்டிவேலை வீராச்சாமி!

அரசு வேலை என்றாலே நகைச்சுவையாக ஒரு சம்பவத்தை சொல்வதுண்டு. ஒருவன் குழி தோண்டிக் கொண்டே செல்வான்; இன்னொருவன் மூடிக் கொண்டே செல்வான். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டால், குழாய் பதிப்பவன் இன்று வரவில்லை; அதனால் என்ன? நாங்கள் இருவர் வந்திருக்கிறோமே. எங்களுக்கு ஒதுக்கிய வேலையை செய்கிறோம் என கூறுவது போல், அரசாங்க வேலை இப்படித்தான் இருக்கும் கிண்டலடிப்பது வாடிக்கை.அதைப்போலவே, மாநகராட்சியின் வேலைகள் சமீபகாலமாக இருக்கிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us