/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அலங்காரத்தை அம்சமாக காண்பிக்கும் திரைச்சிலைகள்! அலங்காரத்தை அம்சமாக காண்பிக்கும் திரைச்சிலைகள்!
அலங்காரத்தை அம்சமாக காண்பிக்கும் திரைச்சிலைகள்!
அலங்காரத்தை அம்சமாக காண்பிக்கும் திரைச்சிலைகள்!
அலங்காரத்தை அம்சமாக காண்பிக்கும் திரைச்சிலைகள்!
ADDED : ஜூன் 22, 2024 12:31 AM

திரைச்சீலைகள் வீட்டை எப்படி அழகாக வைத்துக் கொள்கிறது என்று விளக்குகிறார், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க (காட்சியா) செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ்.
வீட்டு உள்அலங்காரம் என்றவுடன், முதலில் நம் நினைவிற்கு வருவது ஜன்னல் கதவு மற்றும் திறப்புகளுக்கு இடப்படும் திரைச்சீலைகளே. பொதுவாக, திரைச்சீலைகள் என்பது மேலிருந்து கீழாக தொங்கும் வகையில், இடது வலதாக இருபுறமும் நகற்றும் வகையில் அமைக்கப்படும் மடிப்புகளைக் கொண்ட துணி.
இதன் வாயிலாக, வெளிப்புறத்தில் இருந்து வரும் அதிக சூரிய ஒளியையும், காற்றையும், கட்டுப்படுத்தலாம். அதே நேரத்தில் வீட்டின் உட்புறத்தின் அழகை மெருகேற்றவும் பயன்படுத்தலாம்.
முக்கியமாக, அறைக்குள் ஏற்படும் எதிரொலியை தடுக்க பயன்படுத்தலாம். பெரிய அறையாகவும் பெரிய அளவிலான ஜன்னலாக இருப்பின், அடர் நிறங்கள் கொண்ட திரைச்சீலையாகவும், சிறிய அறைக்கு வெளிர் நிறங்களையும் பயன்படுத்துவது சிறப்பு.
இதனை இரு அடுக்குகள் கொண்டதாக அமைத்தால், முதல் அடுக்கு வெள்ளை நிறம் கொண்ட மெல்லிய துணியாகவும், இரண்டாவது அடுக்கு வண்ணத்துணியாகவும் அமைத்தால் மிக அழகாக இருக்கும்.
வெல்வெட் துணி, திரைச்சீலைக்கு மிகவும் அழகானதாக இருக்கும். மிக அதிக வகைகளில் திரைச்சீலைகளும், அதற்குண்டான குழாய்கள், வளையங்கள் மற்றும் பொருத்தும் சாதனங்கள், நாம் விரும்பும் வண்ணம் கடைகளில் கிடைக்கின்றன.
Pencil, coblet, inverted, French , cartridge, duo மற்றும் Coblet button போன்ற ஏழு வகை மடிப்பு முறைகளில் அமைத்து, அறையை அழகுபடுத்தலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.