/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வண்டலுார் பூங்காவுக்கு செல்லும் வால்பாறை புலி வண்டலுார் பூங்காவுக்கு செல்லும் வால்பாறை புலி
வண்டலுார் பூங்காவுக்கு செல்லும் வால்பாறை புலி
வண்டலுார் பூங்காவுக்கு செல்லும் வால்பாறை புலி
வண்டலுார் பூங்காவுக்கு செல்லும் வால்பாறை புலி
ADDED : ஜூலை 18, 2024 07:13 AM

வால்பாறை : கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள முடீஸ் பகுதியில், முள்ளம்பன்றியை வேட்டையாடியதால், காயமடைந்த நிலையில் இருந்த, 1 வயது புலிக்குட்டியை, 2021, செப்., 28ல் வனத்துறையினர் மீட்டனர்.
அதன்பின், தேசிய புலிகள் ஆணையம் ஆலோசனையின் படி, வால்பாறையில் உள்ள மந்திரிமட்டம் பகுதியில் மூன்று ஆண்டுகளாக, புலிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, 3.6 வயதான புலியின் உடல் எடை அதிகரித்து ஆரோக்கியமாக உள்ளது. இந்த புலியை சென்னை, அறிஞர் அண்ணா வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியம் கூறியதாவது:
வால்பாறையில் பராமரிக்கப்படும் புலி, வண்டலுாருக்கு விரைவில் கொண்டு செல்லப்படும். அதற்கு முன், மருத்துவக்குழுவினர் புலியின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.