/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாசாரம் தமிழ்நாடு தினத்தில் சத்குரு பெருமிதம் பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாசாரம் தமிழ்நாடு தினத்தில் சத்குரு பெருமிதம்
பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாசாரம் தமிழ்நாடு தினத்தில் சத்குரு பெருமிதம்
பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாசாரம் தமிழ்நாடு தினத்தில் சத்குரு பெருமிதம்
பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாசாரம் தமிழ்நாடு தினத்தில் சத்குரு பெருமிதம்
ADDED : ஜூலை 18, 2024 07:17 PM

தொண்டாமுத்துார்:''பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாசாரம். இதை உலகம் முழுதும் கொண்டு சேர்க்க வேண்டும்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், ஆண்டுதோறும் ஜூலை 18ம் தேதி, தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என, தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்தது. இதையடுத்து, மாநிலம் முழுதும் நேற்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு தின வாழ்த்து தெரிவித்து, தமிழ் கலாசாரம் குறித்து சத்குரு பேசிய வீடியோ ஒன்றை, தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வீடியோவில் சத்குரு கூறியுள்ளதாவது:
தமிழ் மண், தமிழ் கலாசாரம், தமிழ் இசை, தமிழ் நாட்டியம், தமிழ் கலை, தமிழ் மொழி என்று எதை எடுத்தாலும், தமிழ் என்றால், பக்தி என்ற ஒரு தெம்பு. பக்தி இல்லாமல் தமிழ் கலாசாரம் இல்லை. பக்தர்களின் நாடாக உள்ள தமிழகத்தில் குழந்தை பிறந்தாலும் பக்தி, திருமணம் செய்தாலும் பக்தி, இறந்தாலும் பக்தி என்றே இருந்து வருகிறது.
பக்தியிலேயே ஊறி வளர்ந்திருக்கும் இந்த கலாசாரம், நெஞ்சத்தில் இருக்கும் பக்தி என்ற தெம்பினால் எவ்வளவோ சாதனைகள் செய்திருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாசாரமாக வளர்ந்து வந்திருக்கிறது. எவ்வளவு வளம் என்றால், மற்ற நாடுகள் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு வளமான சமூகமும், கலாசாரமும் இங்கு உருவாக்கப்பட்டது.
இந்த வெற்றிகரமான வாழ்க்கைக்கு காரணமாக இருந்தது நம்முடைய பக்தி. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் மட்டுமில்லாமல், 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள் வளர்த்த கலாசாரம் நம்முடையது.
பக்தியில் ஊறி நனைந்து, வளர்ந்திருக்கிறது தமிழ் கலாசாரம். தமிழ் மக்கள் இதை உணர்ந்து உலகம் முழுதும் தீவிரமாக இந்த பக்தியை கொண்டு சேர்க்க வேண்டும். இது மிக மிக தேவையானது. தமிழ் கலாசாரம் குறித்து வெறுமனே பேசி பயனில்லை. அதை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.