ADDED : ஜூன் 02, 2024 11:14 PM
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே மருதூர் செல்லப்பனூரில் சீதாராம சன்னதி உள்ளது. இங்கு ஸ்ரீ மந்திராசலம் சீதாராம பாத சேவை அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு மாதமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வைகாசி மாத சிறப்பு பூஜை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கால சந்தி பூஜை, வேத பாராயணம், திவ்ய பிரபந்த சேவா காலம், அகண்ட பஜனை ஆகியவை தொடர்ந்து உச்சிகால பூஜை, சற்று முறை நடந்தது.
மூன்றாவது ஆண்டாக சுற்றுவட்டார கிராமங்களாகிய மருதூர், செல்லப்பனூர், சுக்கு காபி கடை, கே. புங்கம்பாளையம் ஆகிய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாய் சீதாராம பாதா சேவா அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.