/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆதிதிராவிட மக்களுக்கு 720 வீடுகள் 'ரெடி' விண்ணப்பிக்க நகர்ப்புற வாரியம் அழைப்பு ஆதிதிராவிட மக்களுக்கு 720 வீடுகள் 'ரெடி' விண்ணப்பிக்க நகர்ப்புற வாரியம் அழைப்பு
ஆதிதிராவிட மக்களுக்கு 720 வீடுகள் 'ரெடி' விண்ணப்பிக்க நகர்ப்புற வாரியம் அழைப்பு
ஆதிதிராவிட மக்களுக்கு 720 வீடுகள் 'ரெடி' விண்ணப்பிக்க நகர்ப்புற வாரியம் அழைப்பு
ஆதிதிராவிட மக்களுக்கு 720 வீடுகள் 'ரெடி' விண்ணப்பிக்க நகர்ப்புற வாரியம் அழைப்பு
ADDED : ஜூலை 18, 2024 11:26 PM
கோவை;ஆதிதிராவிட மக்களுக்காக, குளத்துப்பாளையம் நேதாஜிபுரத்தில், 720 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கோவை குளத்துப்பாளையம் பகுதியில், பொருளாதாரத்தில் நலிவுற்ற வீடில்லாத ஏழை எளிய ஆதிதிராவிட மக்களுக்காக, அனைவருக்கும் வீடு திட்டத்தில், நேதாஜிபுரம் என்ற இடத்தில், 720 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, ஒதுக்கீடு செய்வதற்கு தயாராக உள்ளன.
ரூ.63.18 கோடியில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் மொத்தம், 720 வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை வசதி செய்யப்பட்டிருக்கிறது. மானியமாக தமிழக அரசு ரூ.6 லட்சம், மத்திய அரசு ரூ.1.50 லட்சம் ஒதுக்குகின்றன. பயனாளி பங்களிப்பாக, ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 472 ரூபாய் ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.
இந்தியாவில் வேறெங்கும் வீடோ, நிலமோ இருக்கக் கூடாது. ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த வீடற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு சார்பாக வீடோ, நிலமோ பெற்றிருக்கக் கூடாது. ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு குடியிருப்புக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கணவன், மனைவி மற்றும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களது ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், ஜாதிச்சான்று நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2, வங்கி கணக்கு நகல் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது.