/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி படம் : அருண் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி படம் : அருண்
புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி படம் : அருண்
புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி படம் : அருண்
புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி படம் : அருண்
ADDED : ஜூலை 18, 2024 11:28 PM
போத்தனூர்;வி.எல்.பி, ஜானகியம்மாள் கல்லூரியில், புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடநதது.
கோவைபுதூர் செல்லும் வழியிலுள்ள கல்லூரி அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி துணை முதல்வர் வாசுதேவன் தலைமை வகித்தார். ராவ் மருத்துவமனை டாக்டர் ஆஷா ராவ் பேசுகையில் புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய ஒன்றாகும். தற்போது இப்பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, தடுப்பூசி வந்துவிட்டது. வெளிநாடுகளில் ஏழு வயது குழந்தை முதல் இத்தடுப்பூசி போடப்படுகிறது. புற்றுநோய் பரம்பரையானது கிடையாது. இருப்பினும் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால், மற்றவர்கள் பரிசோதனை செய்து கொள்வதில் தவறில்லை,'' என்றார்,
வி.ஜி.எம்., மருத்துவமனை டாக்டர் மித்ரா பிரசாத் வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்கள் குறித்தும், அதனை தவிர்க்க உட்கொள்ள வேண்டிய சத்தான உணவுகள் குறித்தும் விளக்கினார்.
அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் புற்றுநோய் விழிப்புணர்வு திட்ட மாவட்ட தலைவர் பிரபாகரனின் சேவையை பாராட்டி, அமைப்பின் சர்வதேச தலைவர் பாலச்சந்திரன் சார்பில், பாராட்டு சான்றை அமைப்பின் சர்வதேச இயக்குனர் சீனிவாசன் வழங்கினார். பிரபாகரன் பேசுகையில் புற்றுநோய்க்கான தடுப்பூசியின் விலை இரண்டாயிரமாகும். தற்போது சங்கத்தின் மூலம், ஆயிரத்து 500க்கு போடப்படுகிறது. ஏழை, எளியோரும் பயனடையும் வகையில் இதன் விலையை மேலும் குறைக்க அரசுடன் பேச்சு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.
அலையன்ஸ் சங்கத்தின் முதல் துணை கவர்னர் குணசேகரன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.