/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர்கள் இருவர் கைது ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர்கள் இருவர் கைது
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர்கள் இருவர் கைது
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர்கள் இருவர் கைது
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் வாலிபர்கள் இருவர் கைது
ADDED : ஜூன் 06, 2024 11:52 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், விற்பனைக்கு கஞ்சா கொண்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி ஜோதிநகர் பூங்கா அருகே, எஸ்.பி., தனிப்படை மற்றும் கிழக்கு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்த சதாம் உசேன்,23, பத்ரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முகமது சல்மான்,23, ஆகியோர் என்பதும், சதாம் உசேன், திருப்பூர் ரோடு வீரபாண்டி பிரிவு அருகே, ரமேஷ் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து, சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி பொள்ளாச்சியில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், ஒரு கிலோ, 50 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.