/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொள்ளை வழக்கில் 'ராடுமேன்' கூட்டாளிகள் இருவர் சரண் கொள்ளை வழக்கில் 'ராடுமேன்' கூட்டாளிகள் இருவர் சரண்
கொள்ளை வழக்கில் 'ராடுமேன்' கூட்டாளிகள் இருவர் சரண்
கொள்ளை வழக்கில் 'ராடுமேன்' கூட்டாளிகள் இருவர் சரண்
கொள்ளை வழக்கில் 'ராடுமேன்' கூட்டாளிகள் இருவர் சரண்
ADDED : ஜூலை 19, 2024 02:49 AM

கோவை;ரயில்வே தண்டவாளம் ஒட்டிய குடியிருப்புகளில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கைதான 'ராடுமேன்' கூட்டாளிகள் இருவர், கோர்ட்டில் சரணடைந்தனர்.
தமிழகத்தில் ரயிவே தண்டவாளம் ஒட்டிய குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து, ஒரு கும்பல் கொள்ளையடித்து வந்தனர். கோவையில் மட்டும், 18க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகர தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், கும்பல் தலைவன், தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த மூர்த்தி, 36, கூட்டாளி அம்சராஜன்,26, ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
இரவு நேரங்களில் ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள வீடுகளில், இரும்பு ராடால் கதவை உடைத்து கொள்ளையடித்து செல்வதால், மூர்த்தியை 'ராடு மேன்' என அழைக்கின்றனர். இக்கும்பல், கோவையில், 376 சவரன் தங்க நகை உட்பட மொத்தம், 1,500 சவரன் நகை, 1.76 கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடித்ததும், அந்த பணத்தில், ராஜபாளையத்தில் 4.5 கோடி ரூபாய் மதிப்பில் நுாற்பாலை, மற்றும், 53 சென்ட் இடம் வாங்கியது தெரிய வந்தது.
'ராடுமேன்' மூர்த்தியின் கூட்டாளிகளை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், மூர்த்தியின் மச்சான் மனோஜ்குமார்,38, சுதாகர்,35, ஆகியோர், கோவை ஜே.எம்:2, கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். இவர்களை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ரமேஷ் உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.