/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தக்காளி சாகுபடி தீவிரம் ஏக்கருக்கு 20 டன் எதிர்பார்ப்பு தக்காளி சாகுபடி தீவிரம் ஏக்கருக்கு 20 டன் எதிர்பார்ப்பு
தக்காளி சாகுபடி தீவிரம் ஏக்கருக்கு 20 டன் எதிர்பார்ப்பு
தக்காளி சாகுபடி தீவிரம் ஏக்கருக்கு 20 டன் எதிர்பார்ப்பு
தக்காளி சாகுபடி தீவிரம் ஏக்கருக்கு 20 டன் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 03, 2024 02:42 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. கிணத்துக்கடவில் உள்ள தோட்டத்தில் இரண்டு ஏக்கரில், தக்காளி மற்றும் சோளம் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயி நாராயணன் கூறுகையில், 'ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இப்பயிர் நடவு செய்து இரண்டு மாதங்களாகிறது. தற்போது பந்தலில் கயிறு கட்டும் பணி நடந்து வருகிறது.
மேலும், தக்காளிக்கு தேவையான உரமிடப்பட்டு, நீர் பாய்ச்சப்படுகிறது. ஆனால் களையெடுக்கவும், பந்தலுக்கு கயிறு கட்டவும், தக்காளி பறிக்கவும் ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.
ஒரு ஏக்கரில் நடவு, களை, பராமரிப்பு, காய் பறிப்புக்கு 1.5 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். ஒரு ஏக்கரில், 18 - 20 டன் தக்காளி மகசூல் கிடைக்கும். வரும் நாட்களில் தக்காளி விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
மீதமுள்ள ஒரு ஏக்கரில் சோளம் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. சோளம் விதைப்பு செய்து ஒரு மாத காலம் ஆகிறது. இது மாட்டு தீவனமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,' என்றார்.