/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள் மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

பசுமை நிறைந்த நினைவுகளே!
பள்ளி, கல்லுாரி நட்புகளுடன் மீண்டும் அந்த நாட்கள் வராதா என்று நம்மில் ஏங்காதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. அந்நாட்கள் மீண்டும் வராது எனினும், நட்புகளை சந்திக்கலாம், கொண்டாடலாம் என முன்னாள் மாணவர்கள் சந்திப்பை, ஏற்பாடு செய்துள்ளனர், கார்மல் கார்டன் பள்ளி முன்னாள் மாணவர்கள். 1993ல் பத்தாம் வகுப்பு படித்தவர்கள், 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், இன்று ஒன்று கூடுகின்றனர். பள்ளி வளாகத்தில், காலை 9:00 மணியளவில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
ஆடி கண்காட்சி அசத்தல்
டவுன்ஹால் பூம்புகார் விற்பனை நிலையத்தில், ஆடிக்கண்காட்சி அட்டகாசமாக நடைபெற்று வருகிறது. பழங்குடியினரின் கைவினை பொருட்கள், காட்டன் ஆடைகள், பூஜை சாமான்கள், கடவுள் சிலைகள் என பலவற்றை தரமாக இங்கு வாங்கிச்செல்லலாம். காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர்கள்.
எதிர்கால தலைவர்கள் அறிமுகம்
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, வி.சி.வி., சிசு வித்யோதயா மெட்ரிக் பள்ளியில் மாணவ பொறுப்பாளர்கள், பல்வேறு மன்ற தலைமை பதவியை ஏற்கும் நிகழ்வு, இன்று காலை 8:30 மணியளவில் நடைபெறவுள்ளது.
ஆடி மாத உபன்யாசம்
கோவை திருப்பாவை சங்கம் மற்றும் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்துடன் இணைந்து வழங்கும், குரோதி ஆண்டு ஆடி மாத நிகழ்வு, இன்று ராம்நகரிலுள்ள ஸ்ரீ கோதண்டராமஸ்சுவாமி கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கிருஷ்ண லீலைகள் என்ற தலைப்பில், உபன்யாசம் மாலை, 6:30 முதல் இரவு 8:30 மணிவரை நடைபெறும்.
புத்தக வெளியீட்டு விழா
ஜெம் அறக்கட்டளை நிறுவனர் பழனிவேலு, ஆட்டோபயோகிராபி புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை, 4:00 மணிக்கு அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
அரங்கேற்ற வேளை
பாரம்பரிய கும்மிக்கலை நான்காம் ஆண்டு அரங்கேற்ற நிகழ்வு, இன்று, ஸ்ரீ வட்டமலை ஆண்டவர் கலைக்குழு சார்பில் நடைபெறவுள்ளது. மாலை, 4:00 மணிக்கு துவங்கும் இந்நிகழ்வு புதுப்பாளையம் மதிப்பாபுரி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஆடை அணிவகுப்பு
கைத்தறி ஆடைகளுக்கு, மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பே தனி. இந்த ஆடைகளின் நவீனத்துவத்தை வலியுறுத்தும் வகையில், கே.பி.ஆர்., கலை அறிவியல் ஆராய்ச்சி கல்லுாரியில், கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று காலை, 10:00 முதல் 1:00 மணி வரை நடக்கிறது. கோவை மக்கள் சேவை மையம், இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்துகின்றது.
பரிசும், பாராட்டும்
கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் 10 ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டு விழா கல்லுாரி வளாகத்தில், இன்று மாலை, 3:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கல்லுாரியில் கருத்தரங்கம்
கோவை கருமத்தம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரியில், இன்று காலை 10:00 மணி முதல் 4:00 மணி வரை தேசிய கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கு, கல்லுாரி அரங்கில் நடைபெறவுள்ளது.