Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டி-20 உலக கோப்பை போட்டியில் இன்று நமக்குதான் 'கப்!' கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கை!

டி-20 உலக கோப்பை போட்டியில் இன்று நமக்குதான் 'கப்!' கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கை!

டி-20 உலக கோப்பை போட்டியில் இன்று நமக்குதான் 'கப்!' கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கை!

டி-20 உலக கோப்பை போட்டியில் இன்று நமக்குதான் 'கப்!' கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கை!

ADDED : ஜூன் 29, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
விளையாட ஆசைப்படும் இளைஞர்கள் மட்டுமின்றி, பல கோடி மக்களின் விருப்ப விளையாட்டாக மாறி விட்டது கிரிக்கெட். இந்திய அணியின் போட்டிகள், ஐ.பி.எல்., போட்டிகள் நடக்கும் போது, நாடே விழாக்கோலம் பூண்டது.

அதிலும், உலக கோப்பைக்கு தனிச்சிறப்பு உண்டு. உலக கோப்பை போட்டி வந்து விட்டால், பெரும்பாலான வீட்டு 'டிவி'களை, கிரிக்கெட் நிகழ்ச்சிதான் ஆக்கிரமிக்கிறது. அந்தளவுக்கு கிரிக்கெட் என்றால் பிரியம்.

தற்போது, டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில், பெரும்பாலான மக்களுக்கு பிடித்த இரு அணிகள் மோதுகின்றன.

முதல் முறையாக உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு, தகுதி பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா ஒரு பக்கம், 17 ஆண்டுகளாக டி 20 உலக கோப்பையை வெல்ல காத்திருக்கும், நம் இந்தியா மறுபக்கம்.

இந்த உலக கோப்பையில், தோல்வியே சந்திக்காத இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி, அறிமுக டி 20 உலக கோப்பையில் வெற்றி பெற்றது. 2014ம் ஆண்டு வெற்றிக்கு அருகில் சென்றது. ஆனால் இறுதிப்போட்டியில் ஸ்ரீலங்காவுடன் தோல்வியடைந்தது. இருமுறை அரையிறுதிப்போட்டியில் வெளியேறியது.

இந்தாண்டு, இந்திய அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அனைத்து அணிகளையும் அச்சுறுத்தும் வகையில் இருந்து வருகிறது, அணியின் செயல்பாடு. இதனால், இந்திய அணியின் 17 ஆண்டுக்கால கனவு, இந்தாண்டு நிறைவேற வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

ரசிகர்கள் தங்களின் வீடுகளில் அமர்ந்து, 'டிவி'யில் போட்டியை பார்ப்பதை தாண்டி, நண்பர்களுடன் ஒரு இடத்தில் அமர்ந்து, ஒன்றாக பார்த்து ரசிக்க விரும்புகின்றனர். இதற்கு தீனி போடும் வகையில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள 'அட் 641 சமுதாயக்கூடத்தில்' பெரிய திரையில் போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளிலும், பெரிய திரையில் ஒளிபரப்பப்படுகிறது.

பட்டாசுகளையும், இனிப்புகளையும் தயாராக வைத்துக் கொள்வோம்!

நம்பிக்கை உள்ளது

முதல் முதலாக நடத்தப்பட்ட டி 20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அதன் பின்னர் டி 20 உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு வரவில்லை. இந்தாண்டு இது வரை அனைத்தும் இந்தியாவிற்கு சாதகமாகவே இருந்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

- மாரிமுத்து, கிரிக்கெட் வீரர்.

இந்தியா வெல்ல வேண்டும்

மிகவும் பிடித்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது மகிழ்ச்சி. தென் ஆப்ரிக்கா இது வரை உலக கோப்பையை வென்றது இல்லை. அவர்கள் வென்றாலும் மகிழ்ச்சி தான். ஆனால், இந்திய அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. இன்று இரவு தெரிந்து விடும். கோப்பை யாருக்கு என்பது.

- அசாருதீன், கிரிக்கெட் பயிற்சியாளர்.

இந்தியா சிறப்பான ஆட்டம்

இந்திய அணி இதுவரை, எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று, வலுவான நிலையில் உள்ளது. தென் ஆப்ரிக்கா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும், இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை காட்டியுள்ளது. இந்திய அணியின் ஆதிக்கம் இந்த இறுதி போட்டியிலும் தொடரும். கோப்பையை கட்டாயம் வெல்லும்.

- அரவிந்த், ரசிகர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us