/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொய் வழக்கு போடாதீர்கள் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல் பொய் வழக்கு போடாதீர்கள் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்
பொய் வழக்கு போடாதீர்கள் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்
பொய் வழக்கு போடாதீர்கள் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்
பொய் வழக்கு போடாதீர்கள் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 29, 2024 12:19 AM
கோவை:இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை:
கடந்த 2018ல் கோவை ஆத்துப்பாலம் ஹிந்துக்கள் மயானத்தில், வீர கணேஷ், சிவகுமார் ஆகியோரது சமாதியில், ஆடிப்பெருக்கு வீர வழிபாடு நடத்த, இந்து மக்கள் கட்சி திட்டமிட்டது.
அந்நிகழ்ச்சிக்கு தடை விதித்து, தடையை மீறியதாக, என் மீது உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது, மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 7, நால்வரையும் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு, நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்துள்ள, இந்து மக்கள் கட்சி வழக்கறிஞர் அணிக்கும், நிர்வாகிகளுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும்.
ஹிந்து இயக்க நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம், உள்நோக்கத்துடன் தடை செய்து, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீதும், என் மீதும் வழக்குப்போடுவது வாடிக்கையாகி உள்ளது.
இனியாவது, தமிழக அரசும், காவல்துறையும் ஜனநாயக முறையில் சட்டப்பூர்வமாக இயங்கி வரும் எங்கள் மீது, பொய் வழக்கு போடுவதைக் கைவிட வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.