/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட்; கொங்கு சி.சி., அசத்தல் மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட்; கொங்கு சி.சி., அசத்தல்
மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட்; கொங்கு சி.சி., அசத்தல்
மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட்; கொங்கு சி.சி., அசத்தல்
மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட்; கொங்கு சி.சி., அசத்தல்
ADDED : ஜூலை 10, 2024 11:36 PM
கோவை : மாவட்ட அளவிலான மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், கொங்கு கிரிக்கெட் கிளப் அணி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'என். தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட் டிராபிக்கான' மூன்றாம் டிவிஷன் லீக் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில் கொங்கு கிரிக்கெட் கிளப் மற்றும் ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் ஐ.சி.சி., அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, ஆர்.கே.எஸ்., அணியின் திக்கிஷ் (42), அஷ்வின் பாபு (32) ஆகியோர் பொறுப்பாக விளையாட, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. கொங்கு அணியின் லாரன்ஸ் ஜாக்சன், மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய கொங்கு அணி வீரர்கள், பொறுமையாக விளையாடினர். 41.5 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
அணிக்காக, மோகன் ராஜ் (30), அஜய் (30) நிதானமாக விளையாடினர். ஆர்.கே.எஸ்.அணி சார்பில் கந்தசாமி, எடுத்த நான்கு விக்கெட்கள் பலனளிக்கவில்லை.
மற்றொரு போட்டியில், முதலில் விளையாடிய ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 33.4 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அணியின் விஷால் மாதவ் (36) நிலைத்து ஆடினார். என்.ஐ.ஏ., அணியின் நேசமணி, நான்கு விக்கெட் மற்றும் அசோக் குமார் மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய என்.ஐ.ஏ., அணியின் அஜித் குமார் (52) அரை சதம் அடித்தார். அசோக் குமார் தன் பங்கிற்கு 34 ரன்கள் சேர்த்தார்.
எனினும், என்.ஐ.ஏ., அணி 29.3 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜாலி ரோவர்ஸ் அணியின் திருமுருகன் நான்கு விக்கெட் வீழ்த்தினார். ஜாலி ரோவர்ஸ் அணி, 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.