/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியின் சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால் ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியின் சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால்
ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியின் சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால்
ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியின் சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால்
ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியின் சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால்
ADDED : ஜூலை 10, 2024 11:35 PM

கோவை : விளாங்குறிச்சியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மேல்நிலைப்பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையே, 14ம் ஆண்டு ஸ்ரீ தர்மசாஸ்தா சுழற்கோப்பைக்கான வாலிபால் போட்டி, பள்ளி மைதானத்தில் நடந்தது.
போட்டியை, ஐயப்ப சேவா சங்க தலைவர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். சங்க செயலாளர் விஜயகுமார், தர்மசாஸ்தா பள்ளி தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் சந்தோஷ் நாயர், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இப்போட்டியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியின், நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி, மாணவர் பிரிவில் ஏ.பி.சி., டி.கே.எஸ்., வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா, அகர்வால் ஆகிய அணிகளும், மாணவியர் பிரிவில், ஏ.பி.சி., ஸ்ரீ தர்மசாஸ்தா, அகர்வால் மற்றும் இருகூர் அரசு பள்ளி ஆகிய அணிகளும், லீக் சுற்றுக்கு முன்னேறின.
லீக் சுற்று மாணவர்கள் பிரிவில், ராமகிருஷ்ணா பள்ளி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் ஏ.பி.சி., அணியையும், அகர்வால் அணி 2 - 0 என்ற செட் கணக்கில் டி.கே.எஸ்., அணியையும் வீழ்த்தின.
மாணவியர் பிரிவில், ஏ.பி.சி., அணி 2 - 0 என்ற செட் கணக்கில் அகர்வால் அணியையும், இருகூர் அரசு பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், தர்மசாஸ்தா பள்ளி அணியையும் வீழ்த்தின.